களக்காடு: களக்காடு வரதராஜ பெருமாள் கோயில் தெப்பத் திருவிழா கோலாகலமாக நடந்தது. களக்காட்டில் ஆண்டு தோறும் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை துவங்கி 3 நாட்கள் தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். இவ்வாண்டு திருவிழா கடத்த 9ம் தேதி கோலாகலத்துடன் துவங்கியது. முதல் நாள் சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்பாள் கோயில் திருப்பத் திருவிழா நடந்தது. இரண்டாம் நாளன்று வரதராஜ பெருமாள் கோயில் தெப்பத் திருவிழா நடந்தது. இதையொட்டி வரதராஜ பெருமாள் தெப்பத் திருவிழா நடைபெறும் இடத்திற்கு மாலையில் எழுந்தருளினார். அங்கு பெருமாளுக்கு விசேஷ பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடந்து. இரவு வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ஏற்பாடுகளை தெப்ப உற்சவ கமிட்டியினர், பொதுமக்கள், கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.