பதிவு செய்த நாள்
12
பிப்
2024
04:02
முதுகுளத்தூர்; முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூர், பூக்குளம் கிராமத்திற்கு பாத்தியப்பட்ட தம்புராட்டி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடந்தது.பிப்.10 தேதி காலை சங்கல்பம், கணபதி ஹோமம் தொடங்கி நவக்ரஹ ஹோமம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, கும்ப பூஜை, முதற்கால யாகசாலை பூஜைகள் நடந்தது. பின்பு மங்கல இசை, வேதபாராயணம், விமான கலச ஸ்தாபனம், பூர்ணாஹூதி தீபாரதனை நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு கணபதி வழிபாடு, கோ பூஜை,நாடி சந்தனம், இரண்டாம் கால பூஜை நடந்தது. கடம் புறப்பாட்டுக்கு பின்பு விமான கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது. தம்புராட்டி அம்மனுக்கு பால்,சந்தனம்,இளநீர் உட்பட 21 வகையான அபிஷேகங்கள் சிறப்புபூஜை நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முதுகுளத்தூர் ,கடலாடி அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.