பதிவு செய்த நாள்
14
பிப்
2024
03:02
சோழவந்தான்; சோழவந்தான் அருகே மேலக்கால் தர்மராஜ் நகரில் சித்தர் முத்துவடுக நாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பிப்.,13ல் முதல்கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. இன்று காலை 2ம் கால யாக பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடனது. புற்று வடிவில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள சித்தர் மற்றும் விநாயகர், வராஹி அம்மன், ஜெனகை மாரியம்மன், சிவலிங்கம், நந்தி, மீனாட்சி அம்மன், கருப்பசுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். சித்தர், சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. சிவனடியார்கள், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சிவனடியார்கள் நாகராஜ், நாகராணி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.