பதிவு செய்த நாள்
14
பிப்
2024
03:02
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, வெளிநாட்டு பக்தர்களுகளும் தரிசனம் செய்ய வருகின்றனர். சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள உண்டியல்களில் செலுத்துவது வழக்கம். பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் மற்றும் தங்கம் வெள்ளியை கணக்கிடும் பணி கோயில் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று ஊழியர்கள் ஈடுபட்டனர். அதில் ரொக்கம் பணம்: 1,85,80,188, தங்கம் : 0.118.000, வெள்ளி: கிலோ 572.350 கிராம், வெளிநாட்டுப் பணம் : 153 எண்கள், அமெரிக்கா: 74, மலேசியா: 42, மற்றவைகள் 12, சவூதி அரேபியா; 44. இந்த ரொக்கத் தொகை 10-01-2024 அன்று முதல் கடந்த 34 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை என கோயில் நிர்வாக அதிகாரி கே.எஸ்.ராமராவ் தெரிவித்தார்.