அபுதாபியில் முதல் இந்து கோவில்; பொன்னான அத்தியாயம் என பிரதமர் மோடி பேச்சு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15பிப் 2024 10:02
அபுதாபி: அபுதாபியில் இந்து கோயில் திறந்து வைக்கப்பட்டது பொன்னான அத்தியாயம் என கோயிலை திறந்து வைத்த பின் பிரதமர் மோடி பேசினார்.
இரு நாள் பயணமாக யு.ஏ.இ., சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு அபுதாபியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட சுவாமி நாராயணன் இந்து கோயிலை இன்று திறந்து வைத்தார். பின் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியது,
பல வருடங்கள் கடினமான உழைப்புக்கு பின் இந்து கோயில் திறந்து வைக்கப்பட்டுள்ளது பொன்னான அத்தியாயம். இங்கு புர்ஜ் கலிபா, பியூச்சர் மியூசியம், ஷேக் சயீத் மசூதி மற்றும் பிற ஹைடெக் கட்டிடங்களுக்கு பெயர் பெற்ற ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது திறக்கப்பட்டுள்ள மற்றொரு கலாச்சார அத்தியாயத்தில் பாப்ஸ் இந்து கோயில் சேர்ந்துள்ளது. வரும் காலங்களில் ஏராளமான பக்தர்கள் இங்கு வருவார்கள் என்று நான் நம்புகிறேன். இதன் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள், மற்றும் லட்சக்கணக்கானோர் சார்பில் யு.ஏ.இ., அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.