பழநி மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா; நள்ளிரவு நடப்பட்ட கம்பம்.. குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15பிப் 2024 10:02
பழநி; பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் திருக்கம்பம் சாட்டப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா மூகூர்த்தகால் நடுதலுடன் பிப்.9ல் நேற்று விழா துவங்கியது. பிப்.13 திருக்கம்பம் தயாரிக்க அரிவாள் எடுத்துக் கொடுத்து கம்பம் வெட்டப்பட்டு கிரி வீதியில் தயார் செய்யப்பட்டது. குளத்தில் வைக்கப்பட்டு இரவு கம்பம் அலங்கரித்தல் நடைபெற்றது. பின் மாரியம்மன் கோயில் முன் கம்பம் சாட்டு விழா நள்ளிரவு 1:50 மணிக்கு மாரியம்மன் கோயில் முன் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கம்பத்திற்கு பால், மஞ்சள் நீர் அபிஷேகம் செய்து வழிபட்டனர். கோயிலில் நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றப்படும். பிப்.,20 ல் மாலை கொடியேற்றம், பூவோடு வைத்தல் நடைபெறும். பிப்.27 அன்று இரவு திருக்கல்யாணம், பிப்.28ம் தேதி தேரோட்டம் நடைபெறும். பிப்.29ல் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும்.