Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தென்கலை சீனிவாச பெருமாள் கோவிலில் ... வசந்த பஞ்சமியில் அயோத்தி ராமரின் அற்புத தரிசனம்; பக்தர்கள் பரவசம் வசந்த பஞ்சமியில் அயோத்தி ராமரின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரையிலிருந்து அயோத்திக்கு கிளம்பியது ரயில்; ஜெய்ஸ்ரீராம் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
மானாமதுரையிலிருந்து அயோத்திக்கு கிளம்பியது ரயில்; ஜெய்ஸ்ரீராம் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

15 பிப்
2024
12:02

மானாமதுரை; மானாமதுரையிலிருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில் நேற்று 20 பெட்டிகளுடன் கிளம்பியதில் மானாமதுரையிலிருந்து 350 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பரவசமாக பயணம் மேற்கொண்டனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 500 வருடங்களுக்குப் பிறகு நீண்ட நெடிய போராட்டங்களுக்கு மத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.இந்த விழாவில் உலகம் முழுவதிலும் உள்ள ஏராளமான ஹிந்துக்கள் கலந்துகொண்டு ராமரை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து தினம் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமர் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சென்று வருகின்றனர்.ஏராளமான ஹிந்துக்கள் தங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது ராமர் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்று மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.இதனை போக்கும் வகையில் நாடு முழுவதிலுமிருந்து சலுகை கட்டணத்தில் ஐ.ஆர்.சி.டி.சி., மூலம் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலிருந்து நேற்று இரவு 9:45 மணிக்கு சிறப்பு ரயில் படுக்கை வசதி கொண்ட 20 பெட்டிகளுடன் அயோத்திக்கு புறப்பட்டு சென்றது. இதனை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீ வத்ஸவா மற்றும் சிவகங்கை மாவட்ட பா.ஜ., தலைவர் சத்தியநாதன், துணைத்தலைவர் சுரேஷ்குமார்,மாவட்ட செயலாளர் சங்கரசுப்பிரமணியன், ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன், நகர தலைவர் நமகோடி உள்ளிட்ட பலர் பூக்களை தூவி ரயிலை வழியனுப்பி வைத்தனர்.


இந்த ரயில் மானாமதுரையிலிருந்து மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், பெரம்பலூர் வழியாக உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்திக்கு வருகிற சனிக்கிழமை மதியம் 12:50 மணிக்கு சென்று பின்னர் அங்கிருந்து மறுமார்க்கத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை இரவு கிளம்பி வருகிற 6ந்தேதி மானாமதுரை வந்தடைய உள்ளது. இந்த ரயிலில் தொடர்ந்து 6 நாட்களுக்கு பயணம் செய்யும் பக்தர்களுக்கு உணவு, தங்குமிடம்,ராமர் கோயிலில் தரிசனம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஐ.ஆர்.சி.டி.சி., ரயில்வே நிர்வாகம் செய்து கொடுக்க உள்ளது .மானாமதுரை ரயில்வே நிலையத்திலிருந்து 350 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பயணம் மேற்கொண்ட நிலையில் ரயில் கிளம்பியவுடன் ஏராளமானோர் ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ராம் என பரவசமாக கோஷம் எழுப்பினர்.அயோத்திக்கு சிறப்பு ரயில் கிளம்புவதை தொடர்ந்து மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் விழாக்கோலம் பூண்டிருந்தது.மேலும் ரயில்வே போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar