காளஹஸ்தி சிவன் கோயிலில் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி; கல்வியை துவங்கிய குழந்தைகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15பிப் 2024 03:02
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நேற்று கோயில் வளாகத்தில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் வசந்த பஞ்சமியை யொட்டி (அக்ஷரபாஷியம்) எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு முக்கிய விருந்தினராக ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அறங்காவலர் குழு தலைவர் கூறுகையில்; இன்று முதல் முறையாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு வசந்த பஞ்சமியை ஒட்டி அக்ஷர பாஷ்யம் (எழுத்தறிவித்தல்) நடைபெற்றது . நமக்கு பிறவியை கொடுத்த தாயாரின் மடியில் இருந்து படிப்பு கடவுள் சரஸ்வதி தேவியின் மடிக்கு செல்லும் இந்த சமயத்தையே அக்ஷர பாஷ்யம் என்கிறோம். இன்று படிக்க துவங்கும் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு (அடிக்கல்) பூமி பூஜை போடுவது போன்றது ஆகும் என்றார். வேதப் பண்டிதர்கள் முன்னிலையில் பள்ளிக்கு முதல் முறையாக செல்லும் குழந்தைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் ஓம் நமசிவாய சித்தாய நமஹ என்று எழுதி கல்வியைத் தொடங்கினர். குழந்தைகள் அனைவருக்கும் தாயார் ஞானப்பிரசுனாம்பிகை தேவி சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரின் அருள் கிடைக்க வேண்டுவதாகவும், குழந்தைகள் அனைவரின் எதிர்காலம் சிறந்து விளங்க வேண்டும் என்றும் வழிபாடு செய்யப்பட்டது.