Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் ... காரமடை அரங்கநாதர் கோயிலில் பந்த சேவைக்கு தயாராகும் தீ பந்தம் காரமடை அரங்கநாதர் கோயிலில் பந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூர் மாசித் தெப்ப உத்ஸவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூர் மாசித் தெப்ப உத்ஸவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

15 பிப்
2024
04:02

திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில்  மாசித் தெப்ப உத்ஸவத்தை முன்னிட்டு காலை கொடியேற்றம் நடைபெற்றது. பிப்.24 ல் பகல் மற்றும் இரவு தெப்பம் நடைபெறும்.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தெப்ப உத்ஸவம் 11 நாட்கள் நடைபெறும். நேற்று மாலை சேனை முதல்வர் புறப்பாடு உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடந்தது. இன்று காலை காலை 7:48  மணிக்கு மேல்  பெருமாள் திருமண மண்டபம் எழுந்தருளி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கொடிப்பட்டம் வலம் வருதல் நடைபெற்றது. பின்னர் சுவாமி கொடிமரத்திற்கு புறப்பாடாகி காலை 10:16 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற்றது. மாலையில் காப்புக் கட்டி உத்ஸவம் துவங்கும். பின்னர்  இரவில் பல்லக்கில் பெருமாள் பூதேவி ஸ்ரீதேவியருடன் திருவீதி புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து தினசரி காலை 9:00 மணிக்கு சுவாமி புறப்பாடும், இரவில் சிம்மம், ஹனுமன்,கருடன்,சேஷன், குதிரை,வாகனங்களில் சுவாமி திருவீதி புறப்பாடும் நடைபெறும்.


பிப். 20  இரவில் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதலும், பிப்.21 மாலையில் பெருமாளுக்கு சூர்ணாபிேஷகமும்,  இரவில் தங்கப்பல்லக்கில் புறப்பாடும் நடைபெறும். பிப்.23  காலையில் 8:00 மணி அளவில்  வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் கோயிலிலிருந்து சுவாமி புறப்பாடாகி தெப்பக்குளம் எழுந்தருளலும்,  காலை 10:02 மணி அளவில் தெப்பம் முட்டுத்தள்ளுதலும் நடைபெறும்.  பின்னர் தெப்பக்குள மண்டபம் எழுந்தருளி சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவில் தங்கப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெறும். பிப்.24 ல்  காலை 10:48 மணிக்கு பகல் தெப்பமும், இரவு 7:30 மணிக்கு மேல் இரவு தெப்பமும் நடைபெறும்.  பிப்.25 காலையில் சக்கரத்தாழ்வாருக்கு தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியும்,  இரவில் சுவாமி தங்கப் பல்லக்கில் ஆஸ்தானத்திற்கு எழந்தருளலும் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ முதல் நாள் விழாவில், ... மேலும்
 
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar