சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர் கோயிலில் மாசிமக விழா துவங்கியது
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15பிப் 2024 04:02
சதுர்வேதமங்கலம்; சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசிமகத் திருவிழா துவங்கியது.
குன்றக்குடி ஆதீனத்திற்குட்பட்ட இக்கோயிலின் மாசிமகத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி இன்று காலை 9:30 மணிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கிராம மக்கள் முன்னிலையில் உமாபதி சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்கி கொடிமரத்தில் ரிஷப கொடியேற்றினார். தொடர்ந்து சுவாமி அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு காப்புக்கட்டப்பட்டது. 10 நாள் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வருவார். பிப். 19ம் தேதி காலை 9:30 மணிக்கு ஆத்மநாயகி அம்பாள் ருத்ரகோடீஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. பிப். 20 ல் சமணர்களுக்கு சாப விமோசனம் வழங்கும் கழுவன் திருவிழாவும், பிப் 23 ல் தேரோட்டமும் நடக்கிறது. திருவிழாவின் கடைசி நாளான பிப். 24ம் தேதி தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. இதற்கிடையில் நேற்று மாலை 5:00 மணிக்கு கோயிலில் இருந்து 3 கி.மீ., தூரமுள்ள அரளிப்பாறை கோயிலுக்கு மயில் வாகனத்தில் தண்டாயுதபாணி எழுந்தருளினார். அங்கும் இரவு 7:00 மணிக்கு கொடியேற்றப்பட்டு தண்டாயுதபாணிக்கு காப்புக்கட்டப்பட்டு திருவிழா துவங்கியது.