கல்லல் சவுந்தரநாயகி அம்பாள் சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15பிப் 2024 04:02
காரைக்குடி; கல்லல் சவுந்தரநாயகி அம்பாள் சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில் மாசிமகத் தேரோட்ட விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கல்லல், பகச்சால விநாயகர் சவுந்தரநாயகி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் கோயில் மாசிமகத் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடக்கும். இவ்வாண்டு மாசிமகத் தேர்த் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவு, காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவை முன்னிட்டு தினமும், சிம்மம், பூதம், கைலாசம், காமதேனு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமிபுறப்பாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிப்.22ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும், முக்கிய நிகழ்ச்சியான மாசிமகத் தேர்த் திருவிழா பிப்.23 ஆம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து பிப்.24 ஆம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.