குத்துக்கல்வலசை முட்டமுடையார் முனீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15பிப் 2024 04:02
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு ஊராட்சிக்குட்பட்ட குத்துக்கல்வலசையில் உள்ள முட்டமுடையார் முனீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று அனுக்ஞை, விநாயகர் பூஜை, புண்ணியாகவாஜனம், வாஸ்து சாந்தி, விக்கிரகங்கள் கண் திறத்தல், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்டவைகள் நடந்தது. இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைக்கு பின்னர் காலை 10:00 மணிக்கு முட்டமுடையார் முனீஸ்வரர், கருப்பண்ணசாமி, இருளப்பசாமி, காளியம்மன், ராக்காச்சி அம்மன், பேச்சியம்மன், சோனை முத்து கருப்பன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதி விமான கலசத்தில் உத்தரகோசமங்கை முத்துக்குமார குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை குலதெய்வ வழிபாட்டு பங்காளிகளின் குடும்பத்தார்கள் மற்றும் குத்துக்கல்வலசை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.