Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரதசப்தமி விழாவிற்கு திருமலை ... குடந்தை சங்கர மடத்தின் ஸ்ரீ சரண தீர்த்தம் ரூ.25 லட்சம் மதிப்பில் புதுப்பிப்பு குடந்தை சங்கர மடத்தின் ஸ்ரீ சரண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

15 பிப்
2024
05:02

ஒட்டன்சத்திரம்; பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உப கோயிலான ஒட்டன்சத்திரம் அரசப்பபிள்ளைபட்டி குழந்தை வேலப்பர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

முதல் நாள் செவ்வாயன்று நன்மங்கல இசை, கணபதி பூஜை, முதற்கால வேள்வி நடந்தது. இரண்டாம் நாள் புதன் காலை கனி, கிழங்கு, மூலிகை உள்ளிட்ட பல்பொருள் வேள்வி நடந்தது. அன்று மாலை மூன்றாம் கால வேள்வி நடந்தது. பேரொளி வழிபாடு, திருமறை, திருமுறை விண்ணப்பம் திருநீறு, திருவமுது வழங்குதல் நடந்தது. இன்ற காலை நான்காம் கால வேள்வி, திருக்குடங்கள் ஞானத் திருஉலா, மூலவர் விமானம் மற்றும் திருச் சுற்று தெய்வங்கள் விமானங்கள், திருக்குட நன்னீராட்டுதல் நடந்தது. இதனைத் தொடர்ந்து குழந்தை வேலப்பர் மற்றும் தெய்வங்களுக்கு பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கோயில் கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து திருநீறு, திருவமுது வழங்குதல் நடந்தது. மூலவர் பெருந்திரு நன்னீராட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பழநி கோயில் தேவஸ்தானம் சிவஸ்ரீ அமிர்தலிங்க குருக்கள், சிவஸ்ரீ செல்வ சுப்பரமண்ய குருக்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி , இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர்கள் சுப்பிரமணியன், மணிமாறன், ராஜசேகரன் சத்யா, நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஆறுமுகம், தொப்பம்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் தங்கம் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அன்னதானம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar