Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோனியம்மன் கோயிலில் அக்னி ... தலைகீழாக நிழல் விழும் அதிசய கோவில்; பல விஞ்ஞானிகள் முயன்றும் கண்டுபிடிக்க முடியாத மர்மம்! தலைகீழாக நிழல் விழும் அதிசய கோவில்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீராமர் கட்டிய சிவன் கோவில்; ராமரே பிரதிஷ்டை செய்த ஐந்து லிங்கங்கள்!
எழுத்தின் அளவு:
ஸ்ரீராமர் கட்டிய சிவன் கோவில்; ராமரே பிரதிஷ்டை செய்த ஐந்து லிங்கங்கள்!

பதிவு செய்த நாள்

16 பிப்
2024
12:02

அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை முடிந்த பின், தினமும் ராமரை தரிசிக்க நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் அயோத்திக்கு படையெடுக்கின்றனர். ராமர் கோவில் திறக்கப்பட்ட இந்த நேரத்தில், ராமரை பற்றிய பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. இதில் ராமரே கட்டியதாக கூறப்படும் பஞ்சலிங்கேஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். பாகல்கோட், இளகல்லின் கெலுார் கிராமத்தில் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள லிங்கங்களை ஸ்ரீராமரே பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம். சீதா, லட்சுமணனுடன் ராமர் வனவாசம் செல்லும் போது, ஐஹொளே வழியாக, கெலுார் கிராமத்துக்கு வந்தார். கிராமத்தை அடைந்த போது, காலை பொழுது விடிந்தது. அப்போது சிவன் பூஜை செய்ய, ஐந்து லிங்கங்களை ராமர் பிரதிஷ்டை செய்து பூஜித்தார். இந்த லிங்கங்கள் சத்யோஜாத தேவா, தத்புருஷ தேவா, வாமன லிங்கேஸ்வரா, அகோர தேவா, ஈஷான்ய தேவா என, அழைக்கப்படுகின்றன.

சப்த கன்னியர்; கோவிலின் சுவற்றில், சப்த கன்னியரின் விக்ரகம் உள்ளது. ராமனே இந்த கோவிலை கட்டியதாக, பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் ராம லிங்கேஸ்வரா கோவில் என, அழைக்கின்றனர். பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்கள் ஐஹொளே பட்டதகல்லு, மஹாகூடா கிராமத்தின் அருகில், கெலுாரு கிராமம் உள்ளது. சுற்றும் முற்றும் மலைகள், குன்றுகளுக்கு நடுவில் உள்ள கிராமத்தில் ஏரி உள்ளது. இதனை ராம தீர்த்தம் என அழைக்கின்றனர். 6 ஏக்கர் பரப்பளவில், இந்த ஏரி உள்ளது. இதன் அருகிலேயே பஞ்சலிங்கேஸ்வரர் கோவில், ராமர் வரலாற்றின் சான்றாக உள்ளது. ராமர் லிங்கம் பிரதிஷ்டை செய்த பின், சாளுக்கியர் காலத்தில் கோவில் கட்டப்பட்டது. பாதாமியில் சிவயோக மந்திரில், இத்தகைய பஞ்சலிங்க கோவில் உள்ளது. இதுதவிர பஞ்சலிங்கங்கள், ஒரே இடத்தில் அமைந்துள்ள கிராமம் என்றால், அது கெலுார் கிராமம் தான்.

சூரியன் தரிசனம்: தீபாவளி நேரத்தில், சூரிய கதிர்கள் பஞ்சலிங்கேஸ்வர கோவில் லிங்கத்தின் மீது நேரடியாக விழும் என்பது குறிப்பிடத்தக்கது. கிராமத்தில் மற்றொரு சிறப்பும் உள்ளது. இங்கு வசிக்கும் பலரின் பெயர் ராமா, ராமண்ணா, ராமப்பா என, ராமர் சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். ஜாதி, மதம் வேறுபாடு இல்லாமல் ராமரின் பெயரை வைக்கின்றனர். - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar