கோனியம்மன் கோயிலில் அக்னி கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி பெண்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2024 12:02
கோவை; கோவையின் காவல் தெய்வமாக திகழும் கோனியம்மன் கோவில் மாசி திருத்தேர் விழா வரும் 28ம் தேதி மாசி 16ல் புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது. இதற்கான விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள அக்னி கம்பத்திற்கு பெண்கள் மஞ்சள் நீர் தெளித்தும், கல் உப்பு இறைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர்.