* கடவுளை அடைய பிரம்மச்சரியத்தைக் கடைபிடி. * தீய சிந்தனை இருக்கும்வரை பக்தி உண்டாகாது. * கடவுளிடம் பக்தி செலுத்துவதுதான் மனித வாழ்க்கையின் சாரம். * விவேகம், வைராக்கியம் இல்லாவிட்டால் ஆன்மிகத்தில் முன்னேற முடியாது. * கடவுளைக் காண விரும்புவதும், பற்றற்ற நிலையும் ஒன்றே. * படிப்பை விடக் கேள்வி ஞானமும், கேட்பதை விட நேரில் காண்பதும் உயர்ந்தது. * ஞானியின் நிலை ஒரு குழந்தையைப் போன்றது. * அதிகமாகப் படித்தால் விவாதம், தர்க்கம் செய்யும் புத்தி வந்துவிடும். * ஞானத்தின் முதல் அடையாளம் அமைதி. இரண்டாவது ஆணவமின்மை. * தீர்த்த யாத்திரை சென்றும் பக்தி ஏற்படாவிட்டால் யாத்திரை செல்வதில் பயனில்லை. * கடவுளிடம் இருந்து பேராசை மனிதனை திசை திருப்பி விடும். * பெண், பொன் ஆசைகளில் மனம் ஈடுபட்டால் ஆன்மிகம் கைகூடாது. * கடவுள் என்னும் முதலாளிக்கு பணிவிடை செய்வதே பிறவியின் முதற்பயன். * கடவுள் நமக்கு அருகிலேயே இருக்கிறார் என்பதை உணருங்கள். * இடையூறுகள், ஆபத்துக்கள் குறுக்கிட்டாலும் ஞானி கலங்க மாட்டான். – சொல்கிறார் ராமகிருஷ்ணர்