* எப்போதும் அமைதியாக இருப்பதே உண்மையான வலிமை. * எந்த செயலில் ஈடுபட்டாலும் கடவுளை நினைவில் கொள். * சூழ்நிலைகள் கடினமாக மாறும்போது அமைதியைக் கைவிடாதே. * கஷ்டம் வந்தால் அதை கடவுள் கொடுத்த வரமாகக் கருது. * மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நல்லவழியில் நடந்தால் வாழ்வில் உயர்வு பெறுவாய். * உயிர்களின் மீது அன்பு செலுத்துவது உண்மையான தொண்டு. * எவ்வளவு குறைவாக பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு. * தொடர்ந்து ஆர்வமுடன் பணியாற்று. முன்னேற்றம் ஒருநாள் வந்தே தீரும். * ஆபத்தான வேளையில் பூரண அமைதியே ஒருவருக்கு தேவை. * கடவுளின் சொற்கள் ஆறுதல் கொடுத்து வாழ்க்கைக்கு ஒளி தருகின்றன. * எதிலும் நம்பிக்கையுள்ளவனாக உன்னை மாற்றிக் கொள். * முழு சரணாகதியில்தான் கடவுளின் அருள் கிடைக்கும். * பிறருடன் சண்டையிடுவது கடவுளுக்கு எதிராக போரிடுவது போன்றது. * எல்லா உயிரினங்களின் வடிவிலும் இருப்பவர் கடவுள். * கடந்ததைப் பற்றி வருந்தாதே. வருவது பற்றிக் கற்பனை செய்யாதே.