* மனதை திடமாக வைத்துக் கொள்பவரே உலகத்தை ஆள முடியும். * புத்திசாலி காலம் முழுவதும், சாமர்த்தியசாலி குறிப்பிட நேரத்திலும் பணியாற்றுவர். * பேசும் முன் யோசி. பின்னர் இப்படி பேசி விட்டோமே என வருந்தாதே. * ஒருமுறை மட்டுமல்ல... மூன்று முறை பிரார்த்தனையில் ஈடுபடுங்கள். * பிறருக்கு செய்யும் சிறுஉதவி உங்கள் தலைமுறையை காக்கும். * துன்பம் நேர்ந்தாலும் உற்சாகத்தை விட்டு விடாதீர்கள். * சகோதரரை ஒருபோதும் திட்டாதீர்கள். * ஆண்டவருக்கு பயப்படுபவர் தவறு செய்யவும் பயப்படுவார். * பிறருக்கு படுகுழி தோண்டுபவரை காலம் நிச்சயம் வீழ்த்தும். * வாக்குவாதம் வேண்டாம். கேட்பவரின் புத்தி தடுமாறும். * தீயவரிடம் நற்செயலை எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம்.