சிவன் கோயில்களில் கார்த்திகை முதல் சோம வார வழிபாடு: சங்காபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23நவ 2026 04:11
மானாமதுரை: மானாமதுரை,இளையான்குடி பகுதி சிவன் கோயில்களில் கார்த்திகை முதலாவது சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது.
மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் கார்த்திகை மாதத்தின் முதலாவது சோமவாரத்தை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. சோமநாதர் சுவாமி சன்னதி வளாகத்தில் 108 சங்கு வைத்து ஹோமம் வளர்க்கப்பட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிகளுக்கு அபிஷேக,ஆராதனை, பூஜை நடைபெற்றன.இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர், ஞானாம்பிகை அம்மன் கோயில், சாலைக்கிராமம் வரகுணேஸ்வரர் கோயில்களில் அதிகாலை சுவாமிக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.விழாவில் இளையான்குடி, சாலைக்கிராமம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.