Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரசவல்லி சூரியநாராயண ஸ்வாமி ... விளாச்சேரி பூமி நிலா சமேத வெங்கடேச பெருமாள் கோயிலில் வருடாபிஷேகம் விளாச்சேரி பூமி நிலா சமேத வெங்கடேச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கம்பம் கம்பராயப் பெருமாள் கோயிலில் திருமண மண்டபம் கட்ட ரூ 3.75 கோடியில் பூமி பூஜை
எழுத்தின் அளவு:
கம்பம் கம்பராயப் பெருமாள் கோயிலில் திருமண மண்டபம் கட்ட ரூ 3.75 கோடியில் பூமி பூஜை

பதிவு செய்த நாள்

17 பிப்
2024
02:02

கம்பம்; கம்பம் கம்பராயப் பெருமாள் கோயிலில் திருமண மண்டபம் கட்ட ரூ.3.75 கோடியில் பூமி பூஜை போடும் நிகழ்ச்சி காலை நடைபெற்றது. எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு திருமண மண்டபம் கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார்.

கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோயில் புராதனமும், பிரசித்தி பெற்ற கோயிலாகும். ஒரே வளாகத்தில் சிவனும், பெருமாளும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ள சிறப்பு பெற்ற தலமாகும். இந்த கோயில் வளாகத்தின் ஒரு பகுதி நீண்ட காலமாக பஸ்ஸ்டாண்டாக செயல்பட்டு வந்தது. நகராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த இடத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹிந்து சமய அறநிலையத்துறை திரும்ப பெற்றுக் கொண்டது. அந்த இடத்தில் கோயில் சார்பில் திருமண மண்டபம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக அரசிற்கு - கோரிக்கை வைத்து வந்தனர். எம்.எல். ஏ. ராமகிருஷ்ணன் முயற்சியில் அரசு இந்த கோயில் வளாகத்தில் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்ட அரசு அனுமதி வழங்கியது. அதன்பேரில் இன்று காலை திருமண மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜைகள் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார். முன்னதாக சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. பேசுகையில், " பண்ணைப்புரம் மல்லிங்கேஸ்வரர் கோயில், க.புதுப் பட்டி நீலகண்டேஸ்வரர் கோயில், உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில்களின் காம்பவுண்ட் சுவர் கட்ட ரூ.66 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே போல் பழநி தண்டாயுதபாணி கோயில் நிதியிலிருந்து உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயிலில் திருமண மண்டபம் கட்ட ரூ.4.75 கோடியும், சின்னமனூர் சிவகாமியம்மன் கோயிலில் திருமண மண்டபம் கட்ட ௹.4, 14 கோடியும் அனுமதி பெறப்பட்டுள்ளது. உத்தமபாளையம், சின்னமனூர், கம்பம் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகளும் நடந்து வருகிறது" என்றார். இந்த நிகழ்ச்சியில் ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பாஸ்கர், பால முத்தழகு குழும சேர்மன் ஜெகநாத் மிஸ்ரா, நகராட்சி தலைவர் வனிதா, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜெயபாண்டியன், முருகேசன், வர்த்தக சங்க தலைவர் முருகன், தி.மு.க. கொள்கை பரப்பு இணை செயலாளர் பாண்டி, நகர் தி.மு.க., செயலாளர்கள் வீரபாண்டியன், பால்பாண்டி ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அருணா செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் இன்று மார்கழி மாத கிருத்திகை ஒட்டி மூலவருக்கு அதிகாலை, 4:30 மணிக்கு ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், நாளை வைகுண்ட ஏகாதசி என்னும், சொர்க்கவாசல் திறப்பு விழா ... மேலும்
 
temple news
பெங்களூரு; ம.ஜ.த., – எம்.எல்.சி., சரவணாவின் தொண்டு அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி நாளன்று, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை ரூ. கோடி ... மேலும்
 
temple news
சென்னை; ‘‘திருச்சி உச்சி பிள்ளையார் கோவிலுக்கு, ‘ரோப் கார்’ அமைக்க சாத்தியக்கூறுகள் இல்லாததால், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar