தியாகதுருகம்; தியாகதுருகம் புக்கிலம் பஸ் நிறுத்தத்தில் உள்ள அரச மரத்தடி சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
தியாகதுருகம் புக்கிலம் பஸ் நிறுத்தம் அருகே அரச மரத்தடியில் சித்தி விநாயகர், கிருஷ்ணர், ராகு, கேது ஆகிய சாமிகளுக்கு சிலை வைத்து 50 ஆண்டுகளாக பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதனை செட் பண்ணிட்டு புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் முடிவு செய்து பொதுமக்களிடம் நீதித் திரட்டி பணிகளை துவக்கினர். அரச மரத்தடியை சுற்றி மேடை புதிதாக கட்டப்பட்டு அதில் சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்து 18 ம் தேதி விநாயகர் பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. இன்று காலை 6:00 மணிக்கு கடம் புறப்பட்டு சாமியை வலம் வந்த பின்னர் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சாமிகளுக்கு அபிஷேக அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.