நத்தம், நத்தம் கோவில்பட்டி பகவதி அம்மன் கோயில் திருவிழா கரகம் அழைத்து வரும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி கடந்த பிப்.11 சந்தனக்கருப்பு சுவாமி கோவிலிலிருந்து கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் மேளதாளம் முழங்க கோவிலுக்கு அழைத்து வரப்பட்டு திருவிழா தொடங்கியது. பின்னர் நேற்று முன்தினம் இரவு கரகம் ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.தொடர்ந்து நேற்று காலையில் பக்தர்கள் அக்கினிசட்டி, பால்குடம்,சந்தனகுடம் எடுத்து வந்து பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.இன்று காலை, மஞ்சள் நீராடுதல், கிடாய் வெட்டுதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்திருந்தனர்.