செம்பை சங்கீத உற்சவத்தின் இரண்டாம் நாள்: தொடர்கிறது சங்கீத ஆராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20பிப் 2024 12:02
பாலக்காடு; பாலக்காடு அருகே கோட்டாயி பார்த்தசாரதி கோவிலில் செம்பை ஏகாதசி சங்கீத உற்சவத்தின் இரண்டாம் நாள் சுகுமாரி நரேந்திர மேனனின் சங்கீதக் கச்சேரி நடந்தன.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு எல்லா ஆண்டும் மாசி மாதம் ஏகாதசி உற்சவம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு உற்சவத்திற்கு கடந்த பிப்., 16ம் தேதி கொடியேறுகிறது. உற்சவத்தையொட்டி மூன்று நாள் நடக்கும் சங்கீத உற்சவத்தை நேற்று முன்தினம் பிரபல இசைக் கலைஞர் டி.வி. கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்து சங்கீத கச்சேரி நடத்தினார். அதன் பின் விஜய் ஜேசுதாசின் சங்கீத கச்சேரி நடந்தது. நேற்று மாலை 6.30க்கு சுகுமாரி நரேந்திர மேனனின் சங்கீத அச்சேரி நடந்தது. இவருக்கு ஜயதேவன் (வயலின்), ஆலுவா கோபாலகிருஷ்ணன் (மிருதங்கம்), வெள்ளிநேழி ரமேஷ் (முகர்சங்) ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர். ஏகாதசி உற்சவ நாளான நாளை காலை 8.30க்கு உஞ்சவிருத்தி பஜனை, மண்ணூர் ராஜகுமாரன் உண்ணி தலைமையில் பஞ்சரத்ன தீர்த்தனை, இளம் கலைஞர்களின் சங்கீதா ஆராதனை நடக்கிறது. மாலை 6.00க்கு சென்னை ராமநாதனின் சாக்ஸபோன், பாதிரியார் போள் பூவதிங்கள், பிரகாஷ் உள்ளியேரி குழுவின் ஹார்மோனிடம் இசை நிகழ்ச்சி நடக்கும். 21ம் தேதி ஏகாதசி உற்சவம் நிறைவடைகிறது.