பதிவு செய்த நாள்
20
பிப்
2024
03:02
மானாமதுரை; மானாமதுரை வைகை கரை அய்யனார் அலங்கார குளம் சோனியா சுவாமி கோவில் வருஷாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குலாலர் சமூக நலச்சங்கத்திற்கு பாத்தியப்பட்ட வைகை கரை அய்யனார், அலங்கார குளம் சோனையா சுவாமி கோவில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு பால், பன்னீர், சந்தனம், தயிர், திரவியம் உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் ஹோமங்கள் வளர்த்து புனித நீர் அடங்கிய கடங்களை வைத்தும்,108 சங்காபிஷேகமும், சிறப்பு பூஜைகளை செய்த பின்னர் புனித நீரை கொண்டு சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனைகளை நடத்தினர். பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோவில் வளாகத்தில் உள்ள பரிவார தெய்வங்களான விநாயகர், பாலமுருகன், காளியம்மன், லாட சன்னாசி, ராக்கச்சி அம்மன், நவக்கிரகங்கள், மாயாண்டி சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. வருஷாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் முன்பாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை நிர்வாக அறங்காவலர் காளீஸ்வரன் செய்திருந்தார்.