ஒருசமயம், வெள்ளத்தால் உலகம் அழிய இருந்த வேளையில், படைப்புக் கலன்கள் தாங்கிய அமுதக்குடத்தை, பிரம்மா மேருமலையில் வைத்திருந்தார். பிரளய வெள்ளம் பெருக்கெடுத்து அதில் மிதந்த குடம் தென்பகுதி வந்து சேர்ந்தது. வேடனாக வந்த சிவபெருமான், திருவிடைமருதூரில் தங்கினார். பாணம் ஒன்றை எடுத்து குடத்தைக் குறிவைத்தார். பாணம் எய்த இடம் பாணாத்துறை ஆயிற்று. இவ்வூர் கும்பகோணத்துக்கு வடகிழக்கே உள்ளது. குடம் உடைந்து ஐந்து இடங்களில் சிதறியது. வடமேற்கே சுவாமிமலையிலும், தென்மேற்கே தாராசுரத்திலும், தென்கிழக்கே திருநாகேஸ்வரத்திலும், கிழக்கே திருவிடைமருதூரிலும், வடகிழக்கே கருப்பூரிலும் அமுதம் சிதறி விழுந்தது. இத்தலங்களை "பஞ்சகுரோசத் தலங்கள் என்று குறிப்பிடுவர். "குரோசம் என்றால் "கூப்பிடு தூரம். அருகருகே இந்த தலங்கள் உள்ளதால், இப்பெயர் பெற்றன.