லீப் நாள்; நல்லதா... கெட்டதா? உலகின் நம்பிக்கைகள் என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29பிப் 2024 12:02
2024 ஒரு லீப் ஆண்டு. இந்தாண்டு பிப்ரவரியில் 29 நாட்கள். ஆண்டின் மொத்த நாட்கள் 366. பூமி ஒருமுறை சூரியனை சுற்றி வர 365.25 நாட்களாகிறது. ஆண்டுதோறும் 365 நாட்கள் மட்டும் கணக்கிடப்படுகிறது. மீதமுள்ள 0.25 (கால்வாசி) நாள், நான்கு ஆண்டுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு பிப்ரவரி மாதத்தில் சேர்க்கப்படுகிறது. இதனால் 28க்கு பதிலாக 29 தேதியாக மாறுகிறது. இவ்வாறு நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வரும் லீப் நாள் இன்று..!
கிரேக்கம்; லீப் ஆண்டில் திருமணம் செய்வது தவிர்க்கப்படுகிறது. குறிப்பாக பிப்., 29ம் தேதியில் திருமணம் செய்வதில்லை. மிகுநாள் ஆண்டில் செய்யப்படும் திருமணம் முறிந்துவிடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது
ஸ்காட்லாந்து; மிகுநாளில் தீங்கு விளைவிக்கும் மந்திரவாதிகள் ஒன்று கூடுவதாகவும் அவர்களால் தீங்கு விளையும் என்றும் நம்பப்படுகிறது. பிப்., 29ம் தேதி குழந்தை பிறப்பதையும் துர்நிகழ்வாக கருதுகின்றனர்
அயர்லாந்து – அதிர்ஷ்டம்; ஆண்கள் திருமண விருப்பத்தை தெரிவிக்க காலம் கடத்துவதால், ஆண்களிடம் பெண்கள் திருமண விருப்பத்தை பிப்.,29ம் தேதியில் மட்டுமே தெரிவிக்கலாம் இது கி.பி., 5ம் நூற்றாண்டில் இருந்து பின்பற்றப்பட்டு வந்துள்ளது. பெண்ணின் திருமண விருப்பத்தை ஆண் நிராகரித்தால், அந்த பெண்ணுக்கு, பட்டாடை, கையுறைகள் வாங்கித்தர வேண்டும்.
சிறப்பு திறன்; மிகுநாளில் பிறந்தவர்கள் பல சிறப்பான திறமைகள் கொண்டவராக இருப்பர் என, சில ஜோதிடர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.