திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு தனி வழி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2024 11:03
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மாற்றுத்திறனாளிகள், குழந்தையுடன் வந்த தாய்மார்கள் மற்றும் முதியோர்கள் விரைந்து சென்று சுவாமி தரிசனம் செய்ய கோவில் தங்க கொடி அருகே தனி வழி அமைக்கப்பட்டுள்ளது. இது பக்தர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கோவில் வளாகத்தில் விரிக்கப்பட்டுள்ள தரை விரிப்பானில் சூடு தெரியாமல் இருக்க கோவில் ஊழியர்கள் தண்ணீர் தெளித்தனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.