பதிவு செய்த நாள்
06
மார்
2024
11:03
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி பெருவிழா வரும் 8 ம் தேதி மகாசிவராத்திரி அன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஆண்டு தோறும் மிகப்பெரிய விழாவாக மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மாசி பெருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு மாசி பெருவிழா வரும் 8 ம் தேதி மகா சிவராத்திரி அன்று கொடியேற்றத்துடன் துவங்கி 13 நாட்கள் நடைபெற உள்ளது. 8 ம் காலை கோபால விநாயகர் பூஜையும், இரவு 9 மணிக்கு கொடியேற்றமும் அன்று இரவு சக்தி கரகம் ஊர்வலமும் நடைபெற உள்ளது. 9ம் தேதி காலை 11 மணிக்கு மயானக் கொள்ளை உற்சவமும், இரவு அம்மன் ஆண் பூத வாகனத் தில வீதி உலாவும், 10 ம் தேதி காலையில் தங்க நிற மரப்பல்லக்கிலும், இரவு பெண் பூத வாகனத்திலும் அம்மன் வீதி உலாவும், 11 ம் தேதி காலை தங்க நிற பல்லக்கிலும், இரவு சிம்ம வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடக்கிறது. 12 ம் தேதி மாலை 4.30 மணிக்கு தீமிதி விழாவும், இரவு அன்ன வாகனத்தில் அம்மன் வீதிஉலாவும், 13ம் தேதி காலை தங்கநிற மரப்பலலக்கிலும், இரவு வெள்ளை யானை வாகனத்தில் வீதி உலா நடைபெற உள்ளது. 14ம் தேதி முக்கிய திருவிழாவான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி மாலை 3 மணிக்கு நடக்க உள்ளது. 15-ந்தேதி காலை தங்க நிற மரப்பல்லக்கிலும், இரவு குதிரை வாகனத்திலும் வீதி உலா, 16ம்- தேதி காலையில் தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு பூ பல்லக்கிலும் வீதி உலாவும், 17ம் தேதி காலை தங்க நிற மரப்பல்லக்கிலும், இரவு 10.30 மணிக்கு தெப்பல் உற்சவமும், 18,19, 20ம் தேதிகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், 20ம் தேதி இரவு 8 மணிக்கு மஞ்சள் நீராட்டும், கும்ப படையலும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சுரேஷ் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.