பிரான்மலை பாலமுருகன் கோயிலில் மகா சிவராத்திரி பால்குட விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2024 03:03
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் மகா சிவராத்திரியையொட்டி மலை உச்சிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்துச் சென்றனர்.
இம்மலை உச்சியில் உள்ள பாலமுருகன் கோயிலுக்கு ஆண்டுதோறும் மகாசிவராத்திரி அன்று பக்தர்கள் பால்குடம் எடுத்துச் சென்று வழிபடுவது வழக்கம். இன்று பாலமுருகன் தெய்வீகப் பேரவை மற்றும் ஐந்து ஊர் கிராமத்தார் சார்பில் பால்குட விழா நடந்தது. குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ராம.அருணகிரி முன்னிலை வகித்தார். உமாபதி சிவாச்சாரியார் சிறப்பு பூஜைகளை செய்தார். காலை 10:30 மணிக்கு மலையடிவாரத்திலுள்ள திருக்கொடுங்குன்ற நாதர் கோயில் உற்சவ மண்டபத்தில் இருந்து பால்குடம் ஊர்வலம் புறப்பட்டது. பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பால்குட ஊர்வலம் மலைப்பாதை வழியாக சென்று 2500 அடி உயர உச்சியை அடைந்தது. அங்கு வேல்வடிவிலான பாலமுருகனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.