Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நாட்டியாஞ்சலி நான்காம் ... பகவதி பரஞ்ஜோதி அம்மன் கோயிலில் மாசிக்களரி சிறப்பு வழிபாடு பகவதி பரஞ்ஜோதி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சாவூர் பெரியகோவிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி ரத்து ஏன்: அரசு விளக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தஞ்சாவூர் பெரியகோவிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி ரத்து ஏன்: அரசு விளக்கம்

பதிவு செய்த நாள்

12 மார்
2024
11:03

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவில் வளாகத்தில், ஆண்டுதோறும் நாட்டியாஞ்சலி பவுண்டேஷன் சார்பில், சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தனியார் அமைப்பினர் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என, பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனால், பெரியகோவிலுக்கு வெளியே, மாநகராட்சிக்கு சொந்தமான கலையரங்கம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசின் தொல்லியல் துறை அங்கு நடத்திக் கொள்ள தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், இந்தாண்டு நாட்டி யாஞ்சலி கலையரங்கத்தில் நடந்தது. ஆனால், தஞ்சை பெரியகோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற இருந்த நாட்டியாஞ்சலி விழாவுக்கு, தி.மு.க., அரசு அனுமதி மறுத்ததால், விழா ரத்து செய்யப்பட்டிருக்கிறது என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தன், சமூக வலைதள பக்கத்தில் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

இதுகுறித்து, தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு, தன் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில் அளித்துள்ள விளக்கம்: தஞ்சாவூர் நாட்டியாஞ்சலி விழாவை நடத்த அனுமதி மறுத்தது தி.மு.க., அரசு என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது வதந்தி. நாட்டியாஞ்சலி விழாவை தமிழக அரசு ரத்து செய்யவில்லை. நாட்டியாஞ்சலி விழாவுக்கு அனுமதி மறுத்தது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல் துறை தான். மேலும், தஞ்சை பெரியகோவிலில் சிவராத்திரி தினத்தில், நிகழ்ச்சிகள் நடத்த இந்திய தொல்லியல் துறை அனுமதி மறுத்துள்ளது. ஆகையால் தான், 20 ஆண்டுகளாக நடந்த நாட்டியாஞ்சலி, இந்தாண்டு கோவில் வளாகத்தில் நடைபெறவில்லை. எனவே, அண்ணாமலை கூறிய தகவல் உண்மையல்ல. இவ்வாறு குழு விளக்கம் அளித்துள்ளது. நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி ரத்து தொடர்பாக, இந்திய தொல்லியல் துறை அனுப்பிய கடிதத்தையும், தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு வெளியிட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar