பழநி கிரி வீதியில் பக்தர்களுக்கு தற்காலிக சாமியான பந்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2024 01:03
பழநி; பழநி,கோயில் செல்லும் வழியில் கிரிவீதியில் தற்காலிக சாமியான நிழல் பந்தல்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பழநி வரும் பக்தர்கள் குடமுழுக்கு மண்டபம் வழியே படிப்பாதை, யானை பாதையை அடைந்து கோயில் செல்கின்றனர். பாத விநாயகர் கோயிலில் இருந்து குடமுழுக்கு மண்டபம் வரை பக்தர்கள் வரும் கிரிவீதியில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கிரிவீதியில் வெப்பம் தாங்காமல் நடந்து செல்கின்றனர். இதனை அடுத்து, வடக்கு கிரி வீதி பகுதியில் கோயில் நிர்வாகம் சார்பில் தற்காலிகமாக சாமியான நிழல் பந்தல்களை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கிரிவிதி பகுதிகளில் கூலிங் பெயிண்ட் அடிக்க திட்டமிட்டப்பட்டு வருகிறது. அதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.