கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மார் 2024 01:03
விருத்தாசலம்: கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில், பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம் நடந்தது.
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுாரில் புகழ்பெற்ற சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் சுவாமி கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி காலை 9:30 மணியளவில், சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியதும், கொடி மர பூஜைகள் நடந்தன. கோவில் குருக்கள் வேத மந்திரங்கள் முழங்க, விமர்சையாக காலை 10:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து தங்க கவச அலங்காரத்தில் கொளஞ்சியப்பர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.