Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி ... கொசஸ்தலை ஆற்றில் மூன்றரை அடி முருகன் கற்சிலை கண்டெடுப்பு கொசஸ்தலை ஆற்றில் மூன்றரை அடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அடியாந்திரம் நிகழ்ச்சி; விரதம் இருந்து முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்திய பழங்குடியின மக்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அடியாந்திரம் நிகழ்ச்சி; விரதம் இருந்து முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்திய பழங்குடியின மக்கள்

பதிவு செய்த நாள்

15 மார்
2024
01:03

பந்தலூர்; பந்தலூர் அருகே பொன்னானியில், மறைந்த முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அடியாந்திரம் நிகழ்ச்சியில் அஞ்சலி செலுத்திய பழங்குடியினர்கள்.

பந்தலூர் பகுதியில் வாழ்ந்து வரும் பனியர் சமுதாய மக்கள், மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தும் "அடியாந்திரம்"நிகழ்ச்சி ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நடத்துவார்கள். கடந்த காலங்களில் 23 நாட்கள் விரதம் இருந்து அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், தற்போது அது 7 நாட்களாக சுருக்கி கடும் விரதம் இருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட ஒரு பழங்குடியினர் கிராமத்தை தேர்வு செய்து, அங்கு கோவிலில் பூஜை செய்து தங்கள் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். பந்தலூர் அருகே, பொன்னானி அம்பலபாடி கிராமத்தில், நடந்த நிகழ்ச்சிக்கு பழங்குடியினர் சங்க நிர்வாகி குமரன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்த விரதம் இருந்தவர்கள், கடந்த மூன்று நாட்களாக பகல் மற்றும் இரவில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். அவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஊர்வலமாக அழைத்து வந்தனர். பின்னர் இதற்கான அமைக்கப்பட்ட பச்சை பந்தலில் உள்ள விளக்கை சுற்றி வந்து, முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தி, சங்க மூத்த தலைவர்கள் மற்றும் மூத்தோர்கள் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர். அதனைத் தொடர்ந்து தங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று, முன்னோர்கள் தங்களுக்கு ஆசி வழங்கி வழிநடத்திச் செல்ல வேண்டும் என சிறப்பு பிரார்த்தனை செய்தனர். பின்னர் விஜயன் என்பவர் சாமி ஆடி, விரதம் இருந்தவர்களுக்கு ஆசி வழங்கினார். விரதம் இருந்தவர்கள் தங்கள் விரதத்தை நிறைவு செய்து, அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மூன்று நாட்கள் பழங்குடியின மக்களின் சிறப்பு கலாச்சார நடனங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடந்தது. இந்த நிகழ்வில் பழங்குடியின மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதி மக்கள் அனைவரும் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் குமரன், செங்குட்டவன், வாசு வாசு, ஜெயன் , வேலன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar