கோவை மாகாளி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மார் 2024 05:03
கோவை; என். எச். ரோடு டவுன்ஹால் சந்திப்பில் இருக்கும் ஸ்ரீ மாகாளி அம்மன் கோவிலில் பங்குனி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்ப வழிபாடு நடைபெற்றது. கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இதில் கரு நீல வண்ண காப்பு, தங்க கிரீடத்துடன் புஷ்ப அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாகாளி அம்மனை தரிசனம் செய்தனர்.