அயோத்தி வரும் பக்தர்களுக்காக.. ராமர் கோயில் வளாகத்திற்குள் அதிநவீன வசதிகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2024 01:03
அயோத்தி; உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவிலில் ஜனவரி 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பிரமாண்ட ராமர் கோவிலை திறந்து வைத்தார். தினமும் ராமரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் அயோத்தி வரும் பக்தர்களின் வசதிக்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா, ராம் ஜென்மபூமி மந்திர் வளாகத்திற்குள் அதிநவீன வசதிகளை வழங்கியுள்ளது. ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா ஸ்ரீ ராம்லாலா சர்க்காரை தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்தில் சிறந்த வசதிகளை செய்து வருகிறது. இதனால் வெளியூர் பக்தர்களுக்கு சிறப்பான தங்கும் இடமும், எளிதாக ராமரை தரிசனம் செய்யவும் முடியும்.