அருணாசலேஸ்வரர் கோவிலில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2024 03:03
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விடுமுறை தினத்தில் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். கோடை துவங்கியதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் வரிசை வரும் பக்தர்களுக்கு குளிர்ச்சியான மோர் வழங்கப்பட்டது.