விக்கிரமங்கலம்; வி.கோவில்படியில் மந்தையம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 4ம் காலயாக பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடானது. பாலமுருகன் சர்மா, ரிஷிகேஷன் சிவம் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அ.இ.பார்வட் பிளாக் தேசிய துணை தலைவர் கதிரவன், ஊராட்சி தலைவர் கலியுகநாதன் செல்லம்பட்டி ஒன்றிய தலைவர் கவிதா, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜா பங்கேற்றனர்.(இன்று)மார்ச்.,19ல் சக்தி கரகம் எடுத்து வருதல், மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம், 20ல் பால்குடம், அக்னிச்சட்டி, பொங்கல் வழிபாடு நடக்கிறது. ஏற்பாடுகளை கிராமத்தினர், விழா குழுவினர் செய்கின்றனர்.