பதிவு செய்த நாள்
30
அக்
2012
11:10
பழநி: பழநி கோயில் வரலாற்றில் முதன்முறையாக ஒரே பக்தர் 27 லட்சம் ரூபாயை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தார். கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைகோயில் கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது. ரொக்கம் ரூபாய் ஒரு கோடியே 4 லட்சத்து 76 ஆயிரத்து 516, தங்கம் 558 கிராம். வெள்ளி 30 75 கிராம். அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளின் கரன்சி 248. தங்கத்தினாலான வேல், செயின், நாணயம், மோதிரம், வெள்ளியாலான வேல், ஊஞ்சல், வீடு, பித்தளையிலான மணி, வேல் போன்றவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.ஒரே பக்தர்: ஊர், பெயர் குறிப்பிட விரும்பாத முருக பக்தர் ஒருவர் 27 லட்ச ரூபாயை காணிக்கையாக செலுத்தியிருந்தார். ஆயிரம் ரூபாய் கட்டு(ஒரு கட்டுக்கு 100 நோட்டுக்கள்) 27 காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. பழநி கோயில் வரலாற்றில் இவ்வளவு அதிகமான தொகையை ஒரே பக்தர் காணிக்கையாக செலுத்தி இருப்பது இதுவே முதன் முறை. இந்த வசூல் 18 நாட்களில் கிடைத்தது. இணை ஆணையர் பாஸ்கரன், முதுநிலை கணக்கியல் அதிகாரி ஜெயப்பிரகாஷ், அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ் உண்டியல் திறப்பின் போது இருந்தனர்.