திருப்பதியில் தெப்போற்சவம்; மார்ச் 20 முதல் 24 வரை நடக்கிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2024 05:03
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி சாளக்கட்டளை தெப்போற்சவம் நாளை மார்ச் 20 முதல் 24 வரை நடைபெறுகிறது.
திருமலையில் உள்ள சுவாமி புஷ்கரிணியில் ஸ்ரீவாரி தெப்போத்ஸவம் மார்ச் 20 முதல் 24 வரை தினமும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை நடைபெறுகிறது. தெப்ப உற்சவத்தின் முதல் நாளான மார்ச் 20ம் தேதி ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி ஸ்ரீ சீதா லட்சுமண ஆஞ்சநேயருடன் புஷ்கரிணியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரண்டாம் நாளான மார்ச் 21ம் தேதி ஸ்ரீ கிருஷ்ண ஸ்வாமி ருக்மணியுடன் மூன்று முறை தெப்பத்தில் வலம் வருவார். மூன்றாம் நாளான மார்ச் 22ம் தேதி ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீ மலையப்ப ஸ்வாமி மூன்று முறை தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதேபோல் மார்ச் 23ம் தேதி நான்காம் நாள் ஐந்து முறையும், கடைசி நாளான மார்ச் 24ம் தேதி ஏழு முறையும் ஸ்ரீ மலையப்ப சுவாமி தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். மார்ச் 20 மற்றும் 21ம் தேதிகளில் சஹஸ்ர தீபாலங்கார சேவை, மார்ச் 22, 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் ஆர்ஜித பிரம்மோத்ஸவம் மற்றும் சஹஸ்ர தீபாலங்கார சேவைகளை TTD ரத்து செய்துள்ளது.