Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரிசல்குளம் சுப்பிரமணிய சுவாமி ... திருவாரூர் ஆழித் தேரோட்டம் துவங்கியது; பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்த தியாகராஜ சுவாமி திருவாரூர் ஆழித் தேரோட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஜய யாத்திரை முடித்து காஞ்சி திரும்பினார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்; பக்தர்கள் உற்சாக வரவேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விஜய யாத்திரை முடித்து காஞ்சி திரும்பினார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்; பக்தர்கள் உற்சாக வரவேற்பு

பதிவு செய்த நாள்

20 மார்
2024
07:03

காஞ்சிபுரம் : நாட்டிலுள்ள பல புண்ணிய க்ஷேத்திரங்களில் விஜய யாத்திரை புரிந்து, இரண்டு ஆண்டுகளுக்குப் பின், இன்று (20ம்தேதி) காஞ்சிபுரத்திற்கு வந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 2022 மார்ச் மாதம் விஜய யாத்திரை புறப்பட்டு, ராமேஸ்வரம், ஆந்திரா, தெலங்கானா, காசி, உத்திர பிரதேசம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு விஜயம் செய்தார். அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமி கும்பாபிஷேகம் மற்றும் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்று அருளாசி வழங்கினார். ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலத்தில் ஜோதிர்லிங்க க்ஷேத்திரமான மல்லிகார்ச்சுன சுவாமி கோவில் குடமுழுக்கு விழாவை நடத்தி வைத்தார். திருப்பதியில், சந்திர மவுலீஸ்வர பூஜை செய்து கொண்டு, அதன் தொடர்ச்சியாக விஜய யாத்திரை புரிந்து, இன்று காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு திரும்பினார். சுவாமிகளுக்கு காஞ்சி சங்கர மடம், காஞ்சி நகர வரவேற்பு கமிட்டி சார்பிலும், நகரவாசிகள், பல்வேறு ஆன்மிக அமைப்புகள், திருக்கோவில் சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்வேறு திருக்கோவில்களில் பிரசாதங்களுடன் பூரண கும்ப மரியாதை, மங்கல வாத்தியங்கள் முழங்க, ஸ்ரீபெரியவர்களுக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நகர பவனி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து மடம் திரும்பிய சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருளுரையும், பிரசாதமும் வழங்குகிறார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar