சதுரகிரியில் வழிபாடு; மார்ச் 22 முதல் மார்ச் 25 வரை பக்தர்களுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2024 04:03
ஸ்ரீவில்லிபுத்தூர்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு நாளை மார்ச் 22 முதல் மார்ச் 25 வரை சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ன வனத்துறை தெரிவித்துள்ளது. இக் கோயிலில் நாளை (மார்ச் 22ல்) பிரதோஷம், 24ல் பவுர்ணமி வழிபாடு நடக்கிறது. இதனை முன்னிட்டு நாளை முதல் மார்ச் 25 வரை தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். தற்போது வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படும் நிலையில், பக்தர்கள் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு வரக்கூடாது என வனத்துறை தெரிவித்துள்ளது.