அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் மண்டல பூஜை விழாவில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2024 10:03
அவிநாசி; அவிநாசியில் லிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் மண்டல பூஜை நிறைவு நாளை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
கொங்கேழு சிவ ஸ்தலங்களில் முதன்மையானதாக விளக்கும் ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் பிப்ரவரி 2ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் 48 நாட்களுக்கு,மூன்று கால மண்டல பூஜைகள் நடைபெற்று வந்தது. இதில் நேற்று ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத சந்திரசேகர பெருமானுக்கு திருக்கல்யாண பைபவம் நடைபெற்றது. முன்னதாக கோவிலில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் கூனம்பட்டி ஆதினம் ஸ்ரீ நடராஜ ஸ்வாமிகள் முன்னிலையில், கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி ஆகியவை நடைபெற்றது. அதன் பின்னர் ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத சந்திரசேகர பெருமானுக்கு 16 வகையான திரவியங்களில் அபிஷேகம், ஆராதனைகள் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புஷ்ப பல்லாக்கில் நான்கு ரத வீதிகளிலும் திருவீதி உலா நடைபெற்றது.