பூரணி மற்றும் பொற்கலை அம்பாளுடன் வல்லடிகாரருக்கு திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2024 10:03
மேலுார்; அம்பலகாரன்பட்டியில் உள்ள வல்லடிகாரர் கோயிலில் நேற்று இரவு பூரணி மற்றும் பொற்கலை அம்பாளுடன் வல்லடிகாரருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு மஞ்சள் குங்குமத்துடன் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று (மார்ச் 22) ல் கிடாவெட்டி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், இரவு வெள்ளிரதத்தில் சுவாமி அம்பாளுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மார்ச் 23 தேரோட்டமும், மார்ச் 24 ல் மஞ்சள் நீராட்டும், மார்ச் 25 ல் சுவாமி ஏழைகாத்தம்மன் கோயிலுக்கு புறப்படும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறும்.