பதிவு செய்த நாள்
30
அக்
2012
11:10
திருநெல்வேலி: நெல்லை ஜங்ஷன் சிருங்கேரி சாரதா அம்பாள் கோயிலில் நவசண்டி ஹோமம் நடந்தது.நெல்லை ஜங்ஷன் சிருங்கேரி மண்டபத்தில் சாரதாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு சரந் நவராத்திரி விழா கடந்த 15ம் தேதி துவங்கியது. நவராத்திரி விழாவை முன்னிட்டு லட்சார்ச்சனை, தேவி மகாத்மியம், வேத பாராயணம், பஜனை நடந்தது. நவராத்திரி நிறைவு நாளான நேற்று நவசண்டி ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. ஹோமத்தில் திரவியங்கள், பழங்கள், பூஜைப் பொருட்கள் போடப்பட்டன. தேவி மகாத்மியம் பாராயணம் நடந்தது. நவசண்டி ஹோமத்தை தொடர்ந்து விநாயகர், சாரதாம்பாளுக்கு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து சுகாஷினி பூஜையும், கன்யா பூஜையும் நடந்தது.ஹோமத்தை ராமசாமி வாத்யார், வித்யாசங்கர சிவாச்சாரியார், மணிகண்டன், ரவி, ராஜாமணி, சத்யா, ஸ்ரீ கிருஷ்ண சர்மா, மணி வாத்யார் குழுவினர் நடத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.பூஜையில் சிருங்கேரி மடம் தர்மாதிகாரி ஆடிட்டர் நடராஜ ஐயர், ஜி.வி.கிருஷ்ணன், ஆடிட்டர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.