பதிவு செய்த நாள்
30
அக்
2012
11:10
தென்காசி: இலஞ்சி சிவன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.தென்காசி அருகே இலஞ்சி குழல்வாய்மொழி அம்பாள் உடனுறை குலசேகரநாதர் (சிவன்) கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த 26ம் தேதி யாகசாலை பூஜை துவங்கியது. அன்று காலையில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், தன பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, கஜ பூஜை, கோ பூஜை நடந்தது. மாலையில் விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், பூர்வாங்க பூஜைகள், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், முதல்கால யாகசாலை பூஜை, திவ்யாகுதி, பூர்ணாகுதி நடந்தது.இரண்டாம் நாள் காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலையில் மூன்றாம் கால யாகசாலை பூஜை, திவ்யாகுதி, பூர்ணாகுதி நடந்தது. மூன்றாம் நாள் காலையில் விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், நான்காம் கால யாகசாலை பூஜை, திவ்யாகுதி, பூர்ணாகுதி, மகா தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு நடந்தது. 8.45 மணிக்கு விமான கும்பாபிஷேகம், குழல்வாய் மொழி அம்பாள் உடனுறை குலசேகரநாதர் மூலவர் மகாகும்பாபிஷேகம், மகாபிஷேகம், மகாதீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பகவான் உட் இண்டஸ்ட்ரீஸ் சுப்பிரமணியன் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு திருக்கல்யாணம் நடந்தது. அதன் பின்னர் சுவாமி திருவீதி உலா வந்தார்.