பதிவு செய்த நாள்
30
அக்
2012
11:10
குளித்தலை: கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். பிரசித்தி பெற்ற குளித்தலை கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 27ம் தேதி காலை விநாயகர் பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம் அதிகாலை சிறப்பு பூஜைகளுடன், கும்பாபிஷேக விழா தொடங்கியது. பிறகு, யாக சாலையில் இருந்து திருக்குடங்களில் கொண்டு வரப்பட்ட புனிதநீரை பரிவார தெய்வங்களுக்கு ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தினர். மஹா தீபராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.கும்பாபிஷேக விழாவில், குளித்தலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை பூசாரி லோகநாதன், ஹரிஹரன், பழனிவேல், வீரமணி, கந்தசாமி, சந்தானம் உட்பட பலர் செய்திருந்தனர்.