மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இறைவன் இரவலர் திருக்கோல விழா வெகு விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2024 12:03
சென்னை; மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், நேற்று மாலை இறைவன் இரவலர் திருக்கோல விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விழா 16ம்தேதி காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. விழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலித்து வருகிறார். விழாவின் 7ம் நாளான 22ம் தேதி தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். தொடர்ந்து வெள்ளி விமானத்தில் 63 நாயன்மார்களோடு வீதி உலா நடைபெற்றது. நேற்று மாலை இறைவன் இரவலர் திருக்கோல விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று 25ம் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.