பங்குனி உத்திரம்; கோவை சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2024 02:03
கோவை; கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிரச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் உள்ள கம்பீர விநாயகர் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் இருக்கும் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. புஷ்ப அலங்காரம் மற்றும் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.