காமாட்சியம்மன் கோவிலில் 6ம் ஆண்டு பொங்கல் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2024 04:03
அவிநாசி ; வடுகபாளையம் காமாட்சி அம்மன் கோவிலில் 6ம் ஆண்டு பொங்கல் திருவிழா நடைபெற்றது. அவிநாசி ஒன்றியம், வடுக பாளையத்தில் எழுந்தருளியுள்ள காமாட்சி அம்மன் கோவிலில் 6ம் ஆண்டு பொங்கல் விழா கடந்த 25ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று கும்பம் மற்றும் படைக்கலம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பொங்கல் விழாவான இன்று காலை காமாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம், மா விளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், மாலையில் அலகு குத்தி திருத்தேர் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கோவில் விழா கமிட்டி சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது