பழநியில் தொடர்ந்து குவியும் பக்தர்கள்; காவடிகள் எடுத்து வந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2024 10:03
பழநி; பழநியில், பங்குனி உத்திர விழா நிறைவு பெற்ற நிலையில் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது.
பழநியில் பங்குனி உத்திர விழா நிறைவு பெற்ற நிலையில் தீர்த்த காவடி எடுத்து வரும் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது. ரோப்கார் மாதாந்திர பணிகள் நடைபெற்று வருகின்றன. வின்ச் வரிசையில் கூட்டம் அதிகம் இருந்தது. கோயிலில் காலை முதல் தரிசன வரிசையிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. தரிசன வரிசையில் பல நேரம் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி நதியில் இருந்து தீர்த்த கலசங்களுடன் உள்ளூர், வெளி மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்தனர். பல்வேறு வகையான காவடிகள் எடுத்து வந்து தரிசனம் செய்தனர். அடிவாரம் கிரிவீதி பகுதிகளில் அலகு குத்தி, காவடி எடுத்து மேளதாளத்துடன் கிரி வலம் வந்து சுவாமி தரிசனம் செய்ய சென்றனர்.